Subscribe Us

header ads

பாலமுனை “தார் இப்னு மஸ்ஊத்” மத்ரஸாவிற்கு 2015 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்தல்

முஹாஜிரீன்


பாலமுனை “தார் இப்னு மஸ்ஊத்” ஹிப்ழுல் குர்ஆன் (குர்ஆன் மனனமிடல்) மத்ரஸாவிற்கு 2015 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

பாலமுனை “ஜெஸ்கா (ஜம்இய்யதுஸ் ஸஹ்வா அல் கைரிய்யா)” அமைப்பின் அணுசரனையில் இயங்கும் பாடசாலைக் கல்வியுடன் இணைந்த பகுதி நேர ஹிப்ழுல் குர்ஆன் மத்ரஸாவுக்கு  2015 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பிக்கவுள்ள மாணவர்கள், 2015 இல் தரம் 06க்கு சித்தியடைந்தவர்களாக இருத்தல், அல் குர்ஆனை பூரணமாக ஓதத் தெரிந்தவர்களாக இருத்தல், தேக ஆரோக்கியமுள்ளவர்களாக இருத்தல்; ஆகிய தகைமைகளை கொண்டிருத்தல் வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி வழங்கப்படுவதோடு தரம் 06 இலிருந்து இடைநிலைக் கல்வியைத் தொடர்வதற்காக பாடசாலை அனுமதி பெற்றுக் கொடுக்கப்படும். மேலும், ஆங்கிலம், அரபு, கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பங்களை எதிர்வரும் 10.01.2015; ஆம் திகதிக்கு முன் கிடைக்கக்கூடியவாறு மாணவரின் முழுப்பெயர், வீட்டு முகவரி, பிறந்த தகதி, தொலைபேசி இலக்கம், கல்வித் தகைமைகள் முதலியவற்றைக் குறிப்பிட்டு அதிபர், தார் இப்னு மஸ்ஊத், ஜெஸ்கா, பாலமுனை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர். மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை 15.01.2015 ஆம் திகதி நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு 0778702186இ 0777541357இ 0672255164 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments