Subscribe Us

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் 529 பேருக்கு கொடுக்கபட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு. அதிர்ச்சியில் உலகம்.

எகிப்தின் அரசால் தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு அந்நாட்டின் நீதிமன்றம் ஒன்று மரண தண்டனைகளை விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளது உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் அதிபர் முர்ஸிக்கு ஆதரவாக போராட்டம் செய்தவர்களை பாதுகாப்பு படையினர் கலைத்ததில் ஒருவர் பலியானார். பொலிஸாரைத் தாக்கியது மற்றும் காரியங்களில் இவர்கள் ஈடுபட்டதாக குற்றங் காணப்பட்டுள்ளது. தற்போது குற்றங்காணப்பட்டு ள்ளவர்களில் சுமார் 150 பேர் ஏற்கனவே தடுப்புக்காவலில் இருந்து வருகின்றனர்.

மற்றவர்கள் மீது அவர்கள் நீதிமன்றம் வராமல் அவர்களுக்கு எதிராக வழக்கு நடத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த வேறு 16 பேர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த வழக்கில் பிரதிவாதி தரப்பு வாதங்களை முன்வைக்க முறையான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லையென அவர்களுடைய சட்டத்தரணிகள் முறையிட்டுள்ளனர்.

கெய்ரோவுக்கு தெற்கே மின்யா என்கிற இடத்திலுள்ள நீதிமன்றத்தில் வெறும் இரண்டே அமர்வுகளில் இந்த வழக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றங்காணப்பட்டுள்ளவர்களில் முஸ்லிம் சகோதரத்துவக் குழுவின் தலைவர்கள் அடங்குவர். முர்ஸி ஆதரவாளர்கள் வேறு எழுநூறு பேர் மீது வரும் செவ்வாய்க்கிழமை வழக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

Post a Comment

0 Comments