Subscribe Us

header ads

சிரேஷ்ட அமைச்சர் பியசேன கமகேவும் அரசாங்கம் மீது அதிருப்தியில்...

சிரேஷ்ட அமைச்சர் பியசேன கமகே அரசாங்கம் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
காலியில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசிய அவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தன்னை கவனத்தில் கொள்வதில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கமும் அதன் தலைவர்களும் எனக்கு உரிய உபசரிப்பை வழங்குவதில்லை.
அவர்கள் எனது சேவையை கவனத்தில் கொள்ளாது புறந்தள்ளியுள்ளனர். நான் கடந்த 26 ஆண்டுகளாக காலி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக சேவையாற்றியுள்ளேன்.
நான் கட்சிக்காக செய்யாதது எதுவுமில்லை. கட்சிக்காக சிறைக்கு சென்றிருக்கின்றேன். எனினும் அநீதியான முறையிலேயே என்னை நடத்துகின்றனர்.
எப்படி இருந்தாலும் தடைகள், சவால்களுக்கு மததியில் மக்களுக்கான சேவை தொடர்ந்தும் முன்னெடுப்பேன் என்று உறுதியளிக்கின்றேன் என பியசேன கமகே மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அரசாங்கத்தில் இருந்த விலகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் பட்டியலில் பியசேன கமகேவின் பெயரும் இருப்பதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments