மீண்டும் ஒருமுறை வாழ்ந்துவிட
துடிக்குது மனசு மாணவனாக ......
இன்றெல்லாம் தனிமையை
உணர்கிறேன் பாடசாலை
நாட்களில் தனிமையே தெரியாது ......
அந்தநாட்களை மீட்டி பார்க்க
துடிக்குது நெஞ்சம் நண்பர் நண்பிகளே..
நீங்கள் எல்லோரும் எங்கே
நலமாக இருக்கிறீர்களா ?
எந்தன் அல் அக்ஸா வே உனக்கு
என் ஆயுள் முழுவதும் நன்றி
என் உயிர் தோழனை தோழியை தந்தவள்
நீதானே .....இன்றும் என் இன்ப
துன்பங்களுடன் என் உயிர்
தோழன் பங்கெடுக்கிறான்......
எவ்வளவு இனிமையான காலம்
ஆசிரியர்கள் நண்பனாக பழகியது..
அவர்களிடம் திட்டு வாங்கியது,அடி வாங்கியது..
அதிகம் என்றாலும் ஆசி பெறவும்
தயங்கவில்லை நாம் ........
நாம் கொடுத்த கஷ்டங்களையும்
மறந்து நல்லாசி வழங்கிய ஆசான்களே,எங்கள் அல் அக்ஸா வே உனக்கு எந்தன் ஆயிரம் கோடி
நன்றிகள் ......
இந்த 69 அகவையில் கால் எடுத்து வைக்கும் உன்னை
உன் மாணவனாக வாழ்த்துகிறேன்...
என் நண்பர்களே நீங்களும் மீட்டி
பார்பீர்கள்… அந்த நாட்களை நிச்சியமாய்
எந்தன் நினைவுகள் உங்கள் நினைவுகளுடன்
இணைந்து கொள்ளும்
Kv
Admin
Kv
Admin


0 Comments