இன்றைய சூழலில் பலராலும் விரும்பி எடுக்கப்படும் ஒரு புகைப்படம்
‘செல்பி’ (selfie) சமூக வளைத்தளங்களில் தற்போது செல்பி புகைப்படங்களின்
ஆதிக்கமே அதிகம்.
இந்த நிலையில் செல்பி படங்கள் எடுப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு நாட்டு பிரஜைகளுக்கு ரஸ்யா அறிவுருத்தல் விடுத்துள்ளது.
பலர்
ஒன்றாக இணைந்து செல்பி எடுத்துக்கொள்கையில், அவர்களுடைய முகங்களை
நெருக்கமாக்கிக் கொள்ளவேண்டிய நிலை ஏற்படும், அந்த சந்தர்ப்பத்தில் யாருடைய
தலையிலாவது ‘பேன்’ இருக்கும் பட்சத்தில் அது மற்றவர்களுடைய தலைக்கும்
பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ரஸ்யா சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் தலையில் பேனிருக்கும் மாணவர்களை பாடசாலைக்கு செல்லவேண்டாமென ரஸ்ய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


0 Comments