Subscribe Us

header ads

சோனியின் புதிய முயற்சி கடலுக்கடியில் விற்பனை நிலையம் - முதல் ஷோரூம் துபாயில்

ஜப்பானைச் சேர்ந்த பிரபல எலக்ட்ரானிஸ் நிறுவனமான சோனி தனது புதிய எக்ஸ்பீரியா ஆகுவாடெக் ஷோரூமை துபாயில் கடலுக்கடியில்அமைக்கும் புதிய வணிக முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த ஷோரூமில் எதிர் வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி முதல் சோனி நிறுவனம் தனது புது அறிமுகமான தண்ணீரால் பாதிப்பு ஏற்பட்டாத வாட்டர் ரெசிஸ்டண்ட் ஸ்மார்ட் போன், டேப்லட் மற்றும் இன்ன பிற சாதனங்களையும் விற்பனைக்காக வழங்க இருக்கிறது.

இந்த நவீன தொழில் நுட்பம் மற்றும் புதுமையான வியாபார யுக்தி சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
கடலுக்கு அடியே அமைய உள்ள உலகின் முதல் எக்ஸ்பீரியா ஆகுவாடெக் ஷோரூம் நிச்சயமாக வாடிக்கையாளருக்கு ஒரு புது அனுபவத்தை தரும் எனவும் இது அவர்களது வாழ்க்கையில் மற‌க்கவே முடியாத ஒரு தருண‌மாக அமையும் எனவும் சோனி நிறுவனத்தின் பிராந்திய துணைத்தலைவர் திரு. ருயிடீகெர் ஓடென்பேச் தெரிவித்தார்.


நீச்சல் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றில் திறம்பட பயிற்சி பெற்ற வல்லுநர்களால் வாடிக்கையாளர்கள் கடலுக்கு அடியில் உள்ள ஷோரூமிற்கு பொருட்களை வாங்குவதற்கு அழைத்துவரப்படுவார்கள் எனவும் மேலும் இந்த ஆகுவாடெக் ஷோரூமில் அவர்களால் வழக்கம் போல இயல்பாக மூச்சு விடவும், கடல்தரையில் எளிதாக நின்று பொருட்களை காணவும், வாங்கவும் இயலும் எனவும் அதற்கேற்ப விற்பனைமுறை, பாதுகாப்பு வசதி மற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் என சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments