அளவற்ற அருளாளன், அளவில்லா அன்பாளன், அல்லாஹ்வின் திருநாமம் கூறி ஆரம்பிக்கிறோம்.
ஊடகவியல் ஒழுக்கம், உயர் பண்புகளை விளங்கி அவற்றை உயரிய முறையில் பேணி கடந்த 12 மாதங்களாக கற்பிட்டியின் செய்திகள், ஏனைய கற்பிட்டி பிராந்திய செய்திகள், புத்தளத்து செய்திகளுடன், உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகள் மற்றும் இஸ்லாமிய கட்டுரைகள் போன்ற பல சுவாரஷ்யமான தகவல்களை தாங்கி வலம்வந்த கற்பிட்டியின் குரல் (Kalpitiya Voice) இணைய செய்திச்சேவை தனது பயணத்தில் முதலாம் வருடத்தினை பூர்த்தி செய்து, இன்று 2014 ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதியுடன் இரண்டாம் வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே –அல்ஹம்துலில்லாஹ் !
கற்பிட்டியின் குரல் (Kalpitiya Voice) எனும் சமூக ஊடகம் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் கற்பிட்டி மக்களுக்கு கற்பிட்டி பிரதேசத்தின் இயற்கை வளம்,வரலாற்றுச் சான்றுகள், பண்பாடு, அரசியல்,கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், புத்தாக்க முயற்சிகள், கற்பிட்டி பிரதேச மக்களின் அன்றாட நிகழ்வுகள், அவர்கள் படைக்கும் சாதனைகள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இன்னல்கள் என்று பலதரப்பட்ட தகவல்களை தாங்கி இலங்கையை விட்டு வெளியில் வாழும் தாய் நாட்டிலும், பிறந்த மண்ணிலும் அக்கரையுடவர்களின் கதவுகளை தட்டி அவர்களின் கையில் ஒப்படைக்கும் இப்பயணம் இனிவரும் காலங்களில் கடந்த காலங்களில் கண்ட சாவல்களையும் அனுபவங்களையும் வைத்து தலைசிறந்த ஒரு சமூக ஊடகமாக பரிணமிக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
கற்பிட்டியின் குரல் (Kalpitiya Voice) வலைத்தளத்தில் நிறை இருப்பின் பிறரிடம் சொல்லுங்கள். குறை இருப்பின் எம்மிடம் கூறுங்கள்.
கற்பிட்டியின் குரல் (Kalpitiya Voice) வலைத்தளத்தில் வெளியிடப்படும் செய்திகள், தகவல்கள் அனைத்தும் எமது செய்தியாளர்கள் வழங்கும் பிராந்திய செய்திகள் தவிர் ஏனையவை பல்வேறு நாளிதழ்கள், இணையதள செய்திகள் முகபுத்தக குழுமங்கள் மற்றும் சமுக இணையதளங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து பெறப்பட்டே வெளியிடப்பட்டு வருகின்றது.
இத்தளத்திற்கு தன்னார்வத்துடன் செய்தியளிக்க விரும்புவர்கள் தங்களைப் பற்றிய முழு விபரங்களுடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
கற்பிட்டியின் குரல் (Kalpitiya Voice) இணைய செய்திச்சேவை முதலாம் வருட பூர்த்தியினை முன்னிட்டு நாம் இரண்டு துணை இணைய சேவையை அறிமுக படுத்த உள்ளோம்.
எமது இந்த சிறிய முயற்சியை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.
நிர்வாகம்.
Kalpitiya Voice (கற்பிட்டியின் குரல்)


2 Comments
ALHAMTHULILLAH... WISH U ALL THE VERY BEST KV.
ReplyDeleteMasha Allah Good job guys, Way to go.... Cheeeerrrsss!!!!
ReplyDeleteAllah Bless You