நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கொள்வனவு நடவடிக்கையில்
நட்டம் ஏற்படுள்ளதே தவிர மோசடிகள் இடம்பெறவில்லை என மின்சத்தி எரிசக்தி
அமைச்சர் பவித்ரா வண்ணியாராச்சி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற சஜித்
பிரேமதாஸவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக அமைச்சர்
பவித்ரா வண்ணியாராச்சி இந்த கருத்தை பாராளுமன்ற அமர்வின் போது இன்று
குறிப்பிட்டுள்ளார்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி
கொள்வனவில் ஏற்பட்டுள்ள நட்டத்தை உரியவர்களிடமிருந்து மீள பெற்றுக்
கொள்வதற்கு சட்ட ரீதியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர்
கூறியுள்ளார்.
வர்த்தக நடவடிக்கைகளின் போது ஏதேனும் விடயங்கள்
தொடர்பில் நட்டம் ஏற்படுமாயின் அது தொடர்பில் புலனாய்வு செய்யப்பட்டு
இழப்பீடு மீளப் பெறப்படும் எனவும் பாராளுமன்றத்தில் அமைச்சர் பவித்ரா
வண்ணியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நுரைச்சோலை அனல் மின்
நிலையத்தில் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் புலனாய்வு பிரிவிடம் விசாரணைகளை
பொறுப்பளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே புலனாய்வு
பிரிவினரின் விசாரணை நிறைவின் இறுதியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
எனவும் அமைச்சர் பவித்ரா வண்ணியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.


0 Comments