இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு பொதுநலயவாய
கண்காணிப்பாளர்களை அனுப்புவதற்கு தயார் என்று பொதுநலவாய நாடுகளின் பொது
செயலாளர் கமலேஸ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியும், தேர்தல்கள் ஆணையாளரும் இணக்கம் தெரிவித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஐந்து
நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கமலேஸ் சர்மா
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை
தெரிவித்தார்.
இலங்கையில் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை
நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி
இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் தேசிய கண்காணிப்பாளர்களுக்கு
தேர்தல் வாக்கு எண்ணும் பணிகளுக்கு முழுமையான பிரவேச அனுமதியை வழங்கமும்,
தேர்தல்கள் ஆணையாளர் இதன் போது இணங்கியதாக கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
இதேவேளை
வடமாகாணத்துக்கான தமது விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கமலேஸ் சர்மா,
வடக்கில் இடம்பெறும் அபிவிருத்திகளுக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன்
செயற்பட்டிருப்பதாக கூறியுள்ளார்


0 Comments