எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்களுக்கு தனது ஆதரவினை வழங்கப்போவதாக அறிவித்துள்ள நிலைமையில்
இனிமேலும் சிறீ லன்கா முஸ்லிம் காங்கிரஸ் உற்பட இதர முஸ்லீம் கட்சிகள்
அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லீம்களுக்கு செய்யும் வரலாற்று
துரோகமாகும் என ஐக்கிய தேசிய கட்சி மேல் மாகண சபை உறுப்பினர் எம் எஸ் எம்
பைரூஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிகையில் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பு வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு
ஆதரவு வழங்கும் என நாம் கூறியிருந்தோம்.அதனை நேற்றய தினம் ஞான சார தேரர்
அவர் வாயாலே அறிவித்துவிட்டார்.அரசாங்கத்துக்கு மறைமுகமாக உதவி செய்துவந்த
பொதுபல சேனா அமைப்பு இப்போது நேரடியாக களமிறங்கவுள்ளது.
தமது பதவிகளுக்காக சமுகத்தை அடகுவைக்கும் எமது முஸ்லீம் அமைச்சர்கள்
வரும்காலங்களில் ஞானசார தேரருடன் கூட்டு சேர்ந்து ஜனாதிபதியின் வெற்றிக்காக
ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்வார்கள். அத்தோடு நின்றுவிடாமல் அவரோடு
ஒன்றாக விருந்தும் சாப்பிடுவார்கள். மேலும் பொதுபல சேனாஅமைப்புக்க்கு
அரசியல் ரீதியான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்வதற்க்கு உறுதுணையாகவும்
இருப்பார்கள்.ஏற்கனவே பொதுபல சேனாவின் அட்டூழியங்களுக்கு வாய் மூடியிருந்த
முஸ்லீம் அமைச்சர்கள் இனிவரும் காலங்களில் பொதுபல சேனாவுடன் சேர்ந்து
முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் கை உயர்த்துவார்கள்.
அளுத்கம் சம்பவங்களின் போது முதலை கண்ணீர் வடித்த அரசங்கத்தின்
கூட்டளிகளான முஸ்லீம் அமைச்சர்கள் இப்போது முஸ்லீம்களை எதிரிகளாக நடத்தும்
பொதுபல சேனா அமைப்பு மஹிந்தவுக்காக ஆதரவை அறிவித்தும் ஏதுவுமே
நடக்காததுபோல் அரசாங்கத்தில் அமர்ந்து கொண்டிருப்பது அவர்களுக்கு
வாக்களித்த முஸ்லீம்களுக்கு செய்யும் துரோகமாகும்.
முஸ்லீம் சமூகத்துக்கு எவ்வளவோ துரோகம் செய்து விட்ட இவர்களுக்கு இது
ஒரு பெறிய விடயமல்ல.எமது இருப்பை காப்பாற்ற கூட திராணியற்ற சுயநலவதிகளான
எமது முஸ்லிம் தலைவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் நல்லதொரு பாடத்தை
புகட்ட நாம் அனைவரும் உறுதியுடன் அணிதிரண்டு அவர்களை புறக்கணிக்க வேண்டும்
அதுவே அதுவே நாம் அவர்களுக்கு நாம் படித்துகொடுக்கும் சிறந்த பாடமாகும்.என
ஐக்கிய தேசிய கட்சி மேல் மாகண சபை உறுப்பினர் எம் எஸ் எம் பைரூஸ்
வெளியிட்டுள்ள ஊடக அறிகையில் தெரிவித்துள்ளார்.


0 Comments