லெபனானிலுள்ள 85 ஆயிரம் இலங்கையர்கள் இம்மாதம் 31 ஆம் திகதி
அந்நாட்டிலுள்ள இலங்கைத் துாதரகத்துக்கு முன்னால் உண்ணாவிரதப்
போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக பேரூட்டிலுள்ள இலங்கையைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு எழுத்து மூல
அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நாட்டிலுள்ள துாதரகத்தில் பணியாற்றும் அமைச்சின் மேலதிக ஆலோசகரை உடன்
இடமாற்றி அவருக்குப் பதிலாக இலங்கை மக்களின் தேவைகளை உணர்ந்து அவற்றுக்காக
பணியாற்றும் ஒருவரை நியமிக்குமாறு வேண்டியே இந்த ஆர்ப்பாட்டம்
நடைபெறுவதாகவும் அவ்வறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிங்கள
ஊடகமொன்று அறிவித்துள்ளது.


0 Comments