திருகோணமலை, கட்டைப்பறிச்சான் இறால் பாலம் களப்பில் கடந்த நான்கு
நாட்களாக நீர்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
கரையொதுங்கிய மீன்கள் சில பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பிலுள்ள
கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக,
மூதூர் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பொறுப்பதிகாரியும்
பரிசோதகருமான ஆர்.ஏ.எச்.டீ. பிரேமரத்ன தெரிவித்தார்.
இதேவேளை,
களப்பில் உயிருடன் பிடிக்கப்படும் மீன்களை உண்பதால் எந்தவித பாதிப்பும்
இல்லை என மூதூர் தமிழ் பிரதேச மீனவர் சமாஜ தலைவர் என்.கிருஷ்ணப்பிள்ளை
தெரிவித்தார்.
அத்துடன், இறந்ததன் பின்னர் பிடிக்கப்படும் மீன்களையோ
மயங்கிய நிலையில் பிடிக்கப்படும் மீன்களையோ உண்பது பாதிப்பை ஏற்படுத்தும்
எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இறால் பாலம் களப்பில்
இறந்த நிலையில் நீர்வாழ் உயிரினங்கள் தொடர்ந்தும் கரையொதுங்குவதால்
துர்நாற்றம் வீசுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


0 Comments