ஹெல உறுமயவினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து இன்று
மாலையும் தீர்க்கமான பேச்சுவாத்தையொன்று இடம்பெறுவதாக ஹெல உறுமயவின் ஊடகப்
பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
ஹெல உறுமயவினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து
ஆராய்வதற்காக இருதரப்பு உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று நேற்று
நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவுடனே இன்று பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது.
நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்றன.
நாம் முன்வைத்துள்ள மிக முக்கியமான யோசனை குறித்து ஆராய்ந்து அதனை
செயற்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன. இதன் தொடர்ச்சி
இன்றும் இடம்பெறுகின்றது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Comments