Subscribe Us

header ads

கொழும்பில் நடைபெறும் ஜ.தே.கட்சி கூட்டம். - (படங்கள் இணைப்பு)


(அஸ்ரப் ஏ சமத்)
கொழும்பு ஹைட் பார்க்கில் ஜ.தே.கட்சி கூட்டம் மிகப்பிரமாண்டமான முறையில் பாரிய சனங்களைக் கொண்டு நடைபெறுகின்றது. இக் கூட்டத்தில் ஜ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, கரு ஜயசுரிய ஆகியோருடன் கட்சி முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.



ஐக்கிய தேசிய கட்சியினால் 4 இலட்சத்து 25 ஆயிரம் வாக்களிப்பு நிலைய அமைப்பாளர்களை கொண்ட தேர்தல் படையணியொன்று இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஐ.தே.க. வின் நாடளாவிய ரீதியிலுள்ள 12000 வாக்களிப்பு நிலைய அமைப்பாளர் இன்று கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் ஒன்று கூடியுள்ளனர்.

இம் மாநாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கு பற்றியுள்ளனர்.





Post a Comment

0 Comments