மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியிலுள்ள வீட்டு காணியில் காணப்படும் வேப்பை மரத்தில் இருந்து, தொடர்ச்சியாக பால் வடியும் சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5 தினங்களுக்கு முன் குறித்த வேப்பை மரத்தின் தண்டுப்பகுதியில் இருந்து பால் வடிய ஆரம்பித்தது. இந்நிலையில், தற்போது வேப்பை மரத்தின் பல பகுதிகளில் இருந்தும் தொடர்ச்சியாக அதிகளவான பால் வடிந்து கொண்டிருக்கின்றது.
இவ் வேப்பை மரத்தை மக்கள் சென்று பார்வையிட்டு வருவதோடு, பால் வடியும் பகுதியில் போத்தல்களை வைத்து பாலை எடுத்துச் செல்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: Tamil Mirror
0 Comments