கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புபட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் விசேட விடுமுறையில் வீடு திரும்பி மறுபடியும் வீடுடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
47 கொள்ளைச் சம்பவங்களில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு 22 வருட சிறை தண்டனை அனுபவித்து வரும் நபர் சிறைக்குள் ஒழுக்கமாக நடந்து கொண்டதால் அவருக்கு வீடு செல்ல மூன்று நாள் விசேட விடுமுறை வழங்கப்பட்டது.
அதன்படி வீட்டுக்குச் சென்ற நபர் 13 வீடுகளில் கொள்ளையடித்து 8 லட்சத்திற்கும் அதிகம் பெறுமதியான பொருட்களை களவாடியுள்ளார்.
தெஹிவளை பகுதியில் 13 வீடுகளில் கொள்ளையடித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
55 வயதுடைய நபரிடம் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
.
0 Comments