17 வயதின் கீழ் பிரிவில் பாடசாலைகளுக்கு இடையிலான அகில இலங்கை ரீதியான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் வெண்கலப் பதக்கம் (மூன்றாம் இடம்) சுவீகரித்துக்கொண்ட சாஹிராவின் மாணவர்கள் 2014.09.29-ம் திகதி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு வரவேற்று கௌரவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு வைபவமும் நடைபெற்றது. இந்த ஊர்வளத்திற்கும் பரிசளிப்பு வைபகத்துக்கும் பின்னணியில் பலரின் உழைப்பும் தியாகமும் இருப்பதனை சாஹிரா பாடசாலை நிர்வாகமும் பாடசாலை அபிவிருத்தி சங்கமும் பழைய மாணவர் சங்கமும் நன்றியுடன் நினைவு கூறுகின்றது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ரஞ்சித் ரொட்ரிகோவினால், புத்தளம் கால்பந்தாட்ட சம்மேளன செயலாளர் ஜே.எம். ஜவுஸியின் சிபாரிசுடன் இரண்டு கோல் கம்பங்களை அன்பளிப்பு செய்தார். அவை இவ் வைபவத்தின்போது ஜவுஸியினால் உத்தியோகபூர்வமாக பாடசாலைக்கு ஒப்படைக்கப்பட்டது.
புத்தளம் நகர சபை கௌரவ தலைவர் கே.ஏ. பாயிஸ் இரண்டு ஜெர்சி செட்டுக்கள், கால்பந்துகள் மற்றும் உதைபந்தாட்டத்துக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களும் வழங்கினார். அத்துடன் 17 வயதின் கீழ் கால்பந்தாட்ட அணியின் 15 மாணவர்களுக்கும் அந்த மாணவர்களை பயிற்றுவித்த விளையாட்டு ஆசிரியருக்கும் துவிச்சக்கரவண்டிகளையும் வழங்கினார்.
புத்தளம் கால்பந்தாட்ட சம்மேளன செயலாளர் ஜே.எம். ஜவுஸி கால்பந்துகளும் ஒரு ஜெர்சி செட்டும் அன்பளிப்பு செய்தார்.
ஊர்வலத்தில் பங்குகொண்ட மாணவர்களையும் ஆசிரியர்களையும் உற்சாகபடுத்தும் நோக்கில் சாஹிராவில் கல்வி கற்ற பழைய மாணவர்களினால் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள் பண உதவிகளை வாரி வழங்கினர்.
இந்த வைபவத்தினை வெற்றிகரமாக நடாத்த பாடசாலை நிர்வாகத்தின் பிரதிநிதிகளும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் மற்றும் பாடசாலை மாணவர்களும் அயராது உழைத்தனர்.
இது போன்று பலவழிகளிலும் தங்களின் உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கிய அனைவரும் நன்றிக்கு உரியவர்கள்.
நன்றி: The Puttalam Times
/Az
நன்றி: The Puttalam Times
/Az
0 Comments