Subscribe Us

header ads

சிறுவர் நேய சமுதாயத்தை பெரியவர்கள் உருவாக்க வேண்டும்


ஒக்டோபர் 01-ம் திகதி சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் இலங்கையின் பல பாகங்களிலும் நடைபெற்றன. குறிப்பாக அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் இத் தினம் நினைவுகூறப்பட்டது. புத்தளம், தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வுகளில் கவனயீர்ப்பு பேரணியும் கலை விழாவும் இடம்பெற்றது.



தில்லையடி முஸ்லிம் ம.வி. பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் பழைய மாணவர் சங்கமும் ஏற்பாடு செய்த கவனயீர்ப்புப் பேரணியில் 4, 5, 6-ம் தரங்களில் பயிலும் மாணவ மாணவியர் 300 பேர் வரை கலந்துகொண்டனர். WODEPT நிறுவனம் பேரணிக்கு அனுசரணையை வழங்கியது.

தில்லையடி மு.ம.வி-ன் அதிபர் எஸ்.எம். ஹுதைலீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுகளில், 608A (தில்லையடி) கிராம உத்தியோகத்தர் எம்.எம். மிப்ராஸ், ‘சூரியன்’ கிராம செயற்பாட்டுக்குழு, SWOT இளைஞர் கழகம், தில்லையடியில் இயங்கும் நான்கு சிறுவர் சங்கங்களின் அங்கத்தவர்களும் இப் பேரணியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பேரணியின் முடிவில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நன்றி: The Puttalam Times
/Az








Post a Comment

0 Comments