தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் உட்பட நால்வரின் பிணை மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த
நால்வரையும் பிணையில் விடுவிக்குமாறு கோரி நேற்று முன்தினம் தாக்கல்
செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை இம்மாதம் 6ஆம் திகதி வரை நீதிமன்றம்
ஒத்திவைத்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் ஜெயலலிதா ஜெயராம்
சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கர்நாடகா உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அவசர
மனுவொன்றை கையளித்தனர்.
இதற்கமைய ஜெயலலிதா ஜெயராம் சார்பில் தாக்கல்
செய்யப்பட்ட பிணை மனு இன்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வில்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும் அரச தரப்பு சட்டத்தரணி ஆஜராகாத காரணத்தினால் மனு மீதான விசாரணை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 Comments