Subscribe Us

header ads

ஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடல்


 அடுத்தவருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் என பரவலாக கருத்துக்கணிப்புக்கள் நிலவி வரும் நிலையில், அது தொடர்பில் ஆராய்வதற்கான விசஷட கலந்துரையாடலொன்று இன்றைய அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜப்பக்ஷ இக்கலந்துரையாடலில் ஈடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க்குக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை நாடு திரும்பினார்.
இந்நிலையிலேயே இவ்விசஷட கலந்துரையாடல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாண சபை தேர்தலையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடுவது இதுவே முதல்தடவையாகும்.

Post a Comment

0 Comments