களுத்தரை, கடுகுருந்தை சந்தியில் அமைதியாக வழிபாட்டில் ஈடுபட்ட பக்தர்கள் மீது தண்ணீரும் கண்ணீர் புகைத் தாக்குதலும் நடத்தப்பட்டது.
களுத்தரை, கடுகுருந்தை புனித பிலிப்நேரி** தேவாலயத்திற்கு திரும்பும் சந்தயில், புனித பிலிப்நேரி மாவத்தை ஆரம்பிக்கும் இடத்தில், புனித பிலிப்நேரியாரின் உருவச் சிலையை வைப்பதற்காக களுத்தரை கத்தோலிக்கர்கள் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட போது அதை குழப்புவதற்காக வந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமை மற்றும் அவ்விடத்தில் முழந்தாளிட்டு வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கத்தோலிக்க பக்தர்கள் மீது அசுத்தமான நீரும் கண்ணீர் புகை பிரயோகமும் மேற்கொண்டமை ஆகிய சம்பங்கள் தொடர்பாக 'கத்தோலிக்க சமயத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பு' தமது கடும் விசனத்தை தெரிவிக்கின்றது.
(**புனித பிலிப்நேரியார் புனிதர் (Saint) அந்தஸ்திற்கு உயர்த்தப்படவுள்ள இலங்கை பாதிரி ஒருவராவார். பாப்பரசரின் இலங்கை விஜயத்தின்போது இப் புனிதத்துவத்திற்கு உயர்த்தும் உத்தியோகபூர்வ சமய பூஜைகள் நடைபெறவுள்ளன)
எனினும் இச் சந்தர்ப்பத்தில் மக்களை அமைதிபடுத்தி நடைபெறவிருந்த பெரும் அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக நிதானத்துடனும் விவேகத்துடனும் பாரிய பணியாற்றிய கடுகுருந்தை பங்குத் தந்தை லோரன்சு ராமநாயக அப் பிரதேச மக்களின் பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரித்தானவராகின்றார்.
அதுபோல, இவ் உருவ சிலையை நிறுவுவதற்கு தமது ஒத்துழைப்பை வழங்கிய கடுகுருந்தைப் பிரதேச விகாரைகளின் தலைமை தேரர்களுக்கும் இப் பிரச்சினையை நடுநிலையாக அவதானித்து கத்தோலிக்கர்களின் நியாயத்திற்காக குரல் கொடுத்த முஸ்லிம், இந்து சமயத்தவர்களுக்கும் தமது நன்றியைத் தெரிவிக்கின்றனர்.
பொலிசாரின் நடவடிக்கை மிகவும் கவலையைத் தருவதாகக் குறிப்பிடும் 'கத்தோலிக்க சமயத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பு', சமய வழிபாட்டை குழப்புவதற்காக திட்டமிட்டு வந்து குவிந்த கலகக்காரர்களை இனங்காட்டி கைது செய்யுமாறு பக்தர்கள் கூறிய போதும் பொலிசார் அவர்களை கைது செய்யாமல் இருந்தது ஏன்? அதுபோல் முழந்தாளிட்டு வழிபாட்டில் ஈடுபட்ட பக்தர்களுக்கு அழுக்கு நீரையும் கண்ணீர் புகைத் தாக்குதலையும் பொலிசார் மேற்கொண்டது யாருடைய தேவைக்காக? பொலிசாரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் தொடர்பாக முறையான விசாரனை நடத்தப்பட வேண்டும்.
கலவரமொன்று நடந்து முடிந்த பின் சோகத்தை தெரிவித்துவிட்டு வீடுகளுக்கும் அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கும் நஷ்டஈடு கொடுத்துவிட்டு புள்ளிகளைப் போடுவதை விட்டுவிட்டு, இவ்வாறான கலவர நிலைமைகளை உருவாக்கி நாட்டுக்குள் சகவாழ்வுக்கு கேடுவிளைவித்து தமது குறுகிய நோக்கங்களை அடைந்துகொள்ள தருனம் தேடும் தீவிரவாத குழுக்களை கட்டுப்படுத்துவது அரசாங்கத்தினதும் பாதுகாப்புப் பிரிவினதும் பொறுப்பாகும் என குறிப்பிடும் 'கத்தோலிக்க சமயத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பு', இவை தொடர்பாக விசாரனைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் வரை கத்தோலிக்கர்களாகிய நாம் பார்த்துக்கொண்டி-ருக்கின்றோம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
நன்றி: Lanka true news
/Az
0 Comments