Subscribe Us

header ads

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகம் உண்ணாவிரதம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகத்தினர் இன்று உண்ணாவிரத்த்தில் ஈடுபடவுள்ளனர்.
தமிழ்த் திரையுலகினர் இன்று சென்னை சேப்பாக்க அரச விருந்தினர் மாளிகையின் முன் உண்ணாவிரத்த்தில் ஈடுபடவுள்ளனர்.

இதனால் இன்று தமிழ்த் திரைப்படம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னையை அண்டிய பகுதிகளில் நடைபெறவுள்ள படப்பிடிப்புக்கள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புக்கள் அனைத்தும் இடைநிறுத்தப்படவுள்ளன.

அத்துடன் தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளின் காட்சிகளும் மாலை 6 மணி வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய வர்த்தக சபை மற்றும் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர் கூட்டமைப்பு உட்பட பல அமைப்புக்கள் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கவுள்ளன.

Post a Comment

0 Comments