Subscribe Us

header ads

பலஸ்தீனுக்கு இலங்கை நிதியுதவி

பலஸ்தீனத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான உதவிகளின் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் பலப்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்குமுன்னரும் இலங்கை அரசாங்கம், பல்வேறு வழிகளிலும் பலஸ்தீனத்திற்கு உதவி வழங்கியுள்ளதாக ஆசிய நாடுகள் தொடர்பான பலஸ்தீனின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிதியுதவி சிறந்த விடயங்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும் பலஸ்தீன் தெரிவித்துள்ளது.
THANKS : SLNF
/JAH

Post a Comment

0 Comments