Subscribe Us

header ads

பாலித்த ரங்கேபண்டாரவின் ஹோட்டல்மீது துப்பாக்கிப் பிரயோகம்


புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கேபண்டாரவுக்கு சொந்தமான ஹோட்டல்மீது இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினால் ஹோட்டலின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் துப்பாக்கிப் பிரயோகத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இன்று அதிகாலை மூன்று மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments