Subscribe Us

header ads

தமிழக முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம்: கண்ணீர் மல்க பதவியேற்பு


சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடுத்து முதல் – அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஜெயலலிதா தானாகவே இழந்தார்.

இதனால் அவருக்குப் பதிலாக புதிய முதல்– அமைச்சரை தேர்ந்து எடுக்கும் நிலை ஏற்பட்டது. புதிய முதல்–அமைச்சரை தேர்ந்து எடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரசக்கூட்டம் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

இதில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் தலைவராக ஓ.பன்னீர் செல்வம் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ரோசைய்யாவை சந்தித்தார்.

அப்போது தன்னை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுத்தற்கான தீர்மானத்தையும், புதிய அமைச்சரவை பட்டியலையும், ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தையும் கவர்னரிடம் கொடுத்தார். இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களை பதவி ஏற்கும்படி அழைப்பு விடுத்தார்.

அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோர் இன்று சரியாக மதியம் 1.30 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்தனர். இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வத்துக்கு தமிழக ஆளுநர் ரோசைய்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கண்ணீர் மல்க இந்த பதவிப் பிரமாணத்தை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக் கொண்டார்.

அவரைத்தொடர்ந்து நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

Maalai malar

Post a Comment

0 Comments