Subscribe Us

header ads

ஸ்ரீ.ல.சு.க. அமைப்பாளர் பதவி பறிபோகும் அபாயம்

ஸ்ரீ.ல.சு.க. கட்சியின் இரண்டு அமைப்பாளர்களுக்கு எதிராக கட்சியின் மூத்த (சிரேஷ்ட) உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இதனால் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

பதுளை மற்றும் ஹாலிஎல தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர்களான அமைச்சர் நிமல் சிரிபால த சில்வா, அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோரின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை உடன் ரத்து செய்யுமாறு கட்சியின் உள்ளிருந்து அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன.

நடந்த முடிந்த ஊவ மாகாண சபை தேர்தலில் பதுளை, ஹாலிஎல தொகுதிகள் தோல்வியடைந்தது. ஆளும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இருவரின் தொகுதிகள் இவ்வாறு தோல்வி அடைந்ததை உடன் கவனிக்க வேண்டுமென கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்தத் தோல்விகள் அரசாங்கத்தின் வீழ்ச்சியைக் காட்டுவதாக குறிப்பிடும் ஸ்ரீ.ல.சு.க. மூத்த உறுப்பினர்கள், எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெற வேண்டுமென்றால் தொகுதியை வெற்றிபெறச் செய்யக் கூடிய அமைப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் கூறுகின்றர்.

தோல்வியடைந்த ஏனைய தொகுதிகளின் அமைப்பாளர்களும் பதவி விலக வேண்டும் என தான் கருதுவதாகவும் அதை பதுளை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென தாம் நம்புவதாகவும் கூறிய அமைச்சர் டிலான், ஹாலிஎல தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலக தயார் எனவும் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். 



/Az

Post a Comment

0 Comments