அக்மீமன – குருந்துவத்த பகுதியில் சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் நேற்று மாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதற்கமைய,
மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் வீட்டிற்கு 200 மீற்றர் தொலைவிலுள்ள தேயிலைத்
தோட்டத்திலிருந்து நேற்றிரவு சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
08 வயதான இந்தச் சிறுமி நேற்று பாடசாலையில் இருந்து வீடு திரும்பியதன் பின்னர் காணாமற்போயிருந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.சிறுமி கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்மீமன பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


0 Comments