அஷ்ஷெய்க் ஸஜாத் முஹம்மட் (இஸ்லாஹி)
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு பலத்த ஆர்வத்துடன் என்னுடன் இழையோடியுள்ள புத்தக வாசிப்பு தாகத்திக்குப் புதிய சிந்தனைகளை புகுத்துவதற்காய் ஞாயிற்றுக்கிழமை (2014.09.14) ஆம் திகதி சென்றேன்.
இந்த கண்காட்சி இடம்பெற்ற பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம் பத்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு, 375 க்கும் மேற்பட்ட விற்பனைக் கூடங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சித்திரைப் புத்தாண்டுக்கு புது ஆடைகளை கொள்வனவு செய்வதற்கு அலையும் மக்கள் வெள்ளம் போல் அங்கு மக்கள் காட்சியளித்தனர். ஒவ்வொரு காட்சி கூடமாய் ஏறி இறங்கினேன்.
பெரும்பாலும் அனைத்து காட்சி கூடங்களும் எனக்கு தோல்வியைத்தான் தந்தன. காரணம் அனைத்து காட்சியறைகளிலும் என் கண்கள் தழிழ் புத்தகத்தை நோக்கி நகர்ந்தன.
எனினும் அங்கு தமிழ் மொழி மூல புத்தகங்களை காணவில்லை. சிங்கள மொழியிலான சமூகவியல், விஞ்ஞானம், வர்த்தகவியல், அரசியல், சர்வதேச உறவு போன்ற பல துறைகளிலும் பல ஆயிரக்கணக்கான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் சுமந்த படைப்புகளும் சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம் எனப் பல கலைத் துறைக்கு உயிர்ப்பூட்டும் படைப்புகளும் அங்கு பிரகாசித்தன.
இதற்கு மத்தியில் D பிரிவில் ஒதுக்குப் புரமாக மனித நடமாட்டமில்லாத பகுதில் மிகவும் சோகமாய் இஸ்லாமிக் புக் ஹவுஸ் D - 211 இலக்கத்தில் காட்சியளித்தது. இந்த நிலையில் தழிழ் பேசும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கு பல தசப்தங்களாக அரும் சேவை புரிந்த பூபாலசிங்கம் புத்தக நிலையம் சாவுடாய் கட்சியளித்தது.
இந்தியாவின் கிழக்கு பதிப்பகத்தின் இந்திய முகவரான புக் வின் தூசு படிந்த பழைய புத்தகங்களை விற்பனை செய்யும் கூடமாகக் காட்சியளித்தது.
ஜெயா, எம்.டி.குணசேன மற்றும் சரஸ்வதி போன்ற விற்பனை கூடங்கள் கடமைக்கு ஒரிரு தமிழ் புத்தகங்களை காட்சிப்படுத்தின.
நான் நினைக்கின்றேன் BMICH இலுள்ள 275 காட்சியறைகளில் உள்ள தமிழ் புத்தகங்களின் வீதம் 1% விட குறைவாகும். இன்று தான் எனக்கு ஒர் உண்மை புரிந்தது. வாசிப்பில் பல நூறு மடங்கு பின்தங்கிய சமூகமாகவும் கலை இரசனையற்ற சமூகமாய் இலங்கையில் நாம் வாழ்கின்றோம் என்ற விடயம் அன்று தான் பிறந்தது.
இந்த நிலையில் வாசிப்புக் கலாசாரத்தை ஊக்கப்படுத்த என்னால் சில பரிந்துரைகளை முன்வைக்கின்றேன்:
01. சமூக மட்டத்தில் ஆழமாக தாக்கத்தை செலுத்தும் படைப்பாளர்கள் ஒன்று பட்டு இதனை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும்.
02. வாசிப்புக் கலாசாரம், படைப்பாங்கங்களை விட்டு நாம் ஏன் தூரமாக நிற்கின்றோம் என்பது பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும்.
03. குறிப்பாக இளைஞர்களுக்கு ஏன் வாசிப்பின் மீது ஆர்வம் குறைவாக இருக்கின்றது, இதனை விட்டு தூரமாக்கும் கவனக்கலைப்பான்கள் என்ன? என்பது தொடர்பாக ஆராயப்பட வேண்டும்.
04. இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் எமது படைப்புக்களை நாம் படைக்கத் தவறி விட்டோமா? அப்படியானால் அவர்களின் சமகால தலைமுறை யுகத்திற்கு ஏற்ற வகையில் எமது படைப்புக்கள் கவர்ச்சியாக படைக்கப்பட வேண்டும்.
05. எமது புத்தகங்களை அன்ரோயிட் அப்ளிகேசனான மற்றி அவர்களுக்கு வாசிப்பதற்க்கு இலகுபடுத்த முடியும்.
06. பள்ளிப் பருவத்தில் வாசிப்பு கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும்.
07. அதற்க்கு ஏற்ற வகையில் எமது சிறுவர் இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும்.
08. வீட்டுக்கு ஒரு வாசிகசலை எனும் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.
09. பாட நூல்களுக்கு அப்பால் ஆசிரியர்கள் மாணவர்களை வாசிக்க ஊக்கப்படுத்த வேண்டும்.
10. ஆசிரியர்கள் அறிவுபூர்வமான படைப்புக்களை காட்சிப்படுத்த வேண்டும்.
11. ஊர் மட்டங்களில் வாசிப்பு மன்றங்கள் உருவாக்க வேண்டும் வாரம் ஒரு முறை அங்கு வாசிப்பு கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும்.
12. நாம் தினமும் வாசிக்கின்ற நூல்களை ஏனையவர்கள் வாசிக்கும் வகையில் அதில் உள்ள சில விடயங்களை பதிவிடுவதோடு அந் நூலை முக நூலில் அறிமுகப்படுத்த வேண்டும்.
13. எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவர்களின் படைப்புக்களை சமூக மட்டத்தில் வெளிக்கொண்டு வருவதற்க்கு உதவி செய்ய வேண்டும்.
14. எமது கிராமங்களில் உள்ள புத்தக சாலைகளில் பொதுவான நூல்களை விற்பனை செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும்.
15. இல்லாவிடின் ஒரு குழு இதற்காக முன்வந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பொது புத்தக காட்சிப்படுத்தல் நிகழ்ச்சியை செய்ய முன்வர வேண்டும்.
நன்றி: The Puttalam Times


0 Comments