நாமல் ராஜ பக்ஸ சிரிமாவோ பாலிகா வித்தியாலய மணவிகளினதும், ஆசிரியர்களினதும் எதிர்ப்புகளுக்கு ஆளானார்"
எதிர்வரும் தினங்களில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ள கால்டன் ரகர் செவன்ஸ் போட்டி சம்பந்தமாக கொழும்பிலுள்ள பிரதான பாடசாலகளின் மாணவ மாணவியருக்கு விளக்கமளிக்கும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் பாடகன் இராஜ் வீரரத்னவும் ஜூலை மாதம் 31 ஆம் தேதி கொழும்பு சிரிமாவோ பண்டாரனாயக பாலிகா பாடசாலைக்குள் பிரவேசித்து பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முனந்துள்ளனர். அன்றைய தினம் சுகாதார நிகழ்ச்சித்திட்டம் ஒன்று பிரதான மண்டபத்தில் நடந்தவாறு இருந்துள்ளது. அதனிடையே பிரச்சாரத்துக்காக அதிபர் நாமல் ராஜபக்ஸவுக்கு இடமளித்துள்ளார். அச்சந்தர்ப்பத்தில் பாடகன் இராஜ் வீரரத்ன பாடலொன்றை பாடி அதற்கேற்ப மேடையில் ஏறி நடனம் ஆடுமாறு பாடசாலை மாணவிகளை வேண்டியுள்ளார். அதற்கு பாடசாலையின் மாணவ தலைவிகளும் ஆசிரியர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஒரு மாணவ தலைவி நாமலையும் , விராஜையும் நேருக்கு நேராக கண்டித்துளார். அவர்களின் எதிர்ப்பு வர வர அதிகரித்ததன் காரணமாக இருவரும் பிரச்சார வேலைகளை இடைனடுவில் முடித்துக்கொண்டு வெளியேறி உள்ளனர்.
( ராவய பிரதான தலைப்புச்செய்தி - 03/08/2014)
தமிழில்: எம் எல் ஹாஜா சகாப்தீன்
தமிழில்: எம் எல் ஹாஜா சகாப்தீன்
1 Comments
Well done girls! Colleges especially Girls Colleges r not meant for the politicians whims n fancies.
ReplyDelete