Subscribe Us

header ads

சகோதர ஊடகமான புத்தளம் ஒன்லைன் எழுத்தாளர் வசீம் அக்ரம் கத்தார் பயணமானார்; அவருக்கு புத்தளம் ஒன்லைன் வழங்கிய பிரியாவிடை நிகழ்வு.

From KV Desk;
புத்தளத்தில் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர், தனக்கென தனியானதொரு பாணியை (  Unique Style ) உருவாக்கி கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என இவரினால் எழுதப்பட்ட ஆக்கக்கள் ஏராளம். இவரது ஆக்கக்கள் அணைத்தும் வாசிப்பவர் மனதை கவர்ந்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை.


உங்கள் பொருளாதாரம் விருத்தி அடைந்து, எதிர்காலம் சிறப்பாக அமைய, எல்லாம்வல்ல இறைவன்துணைபுரிவானாக... (ஆமீன்)....


ஒரு இலட்சிய வாலிபன் !! பொறுப்புணர்ந்து பயணமானார் !! எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்
புத்தளம் ஒன்லைன் குழுமத்தின் உறுப்பினர்களில் ஒருவரான வசீம் அக்ரம் இன்று (31.07.2014) அதிகாலை கத்தார் பயணமானார்.

இவர் புத்தளம் ஒன்லைன் வளர்ச்சிக்காக ஆற்றிய சேவைகளை பாராட்டியும் கத்தார் செல்லும் அவர் தொடர்ந்தும் அவ்வாறான பணிகளை புத்தளம் ஒன்லைனுக்காகவும் அதேபோன்று சமூக நலனுக்காகவும் ஆற்ற வேண்டுமென்ற வகையில் புத்தளம் ஒன்லைன் ஏற்பாடு செய்த பிரியாவிடை நிகழ்வு நேற்று காலை 9.30 மணிக்கு அல்ஹனா கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய புத்தளம் பெரிய பள்ளிவாசல்  பிரதம நம்பிக்கையாளரும் புத்தளம் ஒன்லைன் ஆலோசனை குழு உறுப்பினருமானஅல்ஹாஜ் எஸ்.ஆர்.எம் முசம்மில் அவர்கள் உரையாற்றுகையில், சகோதரர் வசீம் அக்ரம் அவர்களுடன் நான் அறிமுகமாகிய சிறுது காலத்திக்குள் சமூக விடயங்களில் அவர் காட்டிய ஆர்வத்தினை கண்டுகொண்டேன். புத்தளம் ஒன்லைனுடன் மாத்திரமன்றி ஊரில் இடம் பெற்ற பல முக்கிய நிகழ்வுகளிலும்பெரிய பள்ளியுடன் இணைந்து தனது பங்களிப்பினை அவர் வழங்கியுள்ளார் எனக் குறிப்பிட்டார்.
IMG_20140731_WA0012
IMG_20140731_WA0015
தொடர்ந்து உரையாற்றிய புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவரும் புத்தளம் ஒன்லைன் ஆலோசனை குழு உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள், வசீமின் தந்தை தனது பாடசாலை வகுப்பு நண்பன். புத்தளம் ஒன்லைன் விடயங்களில் தம்பி வசீமின் பங்களிப்பு  அளப்பரியது. ஊடகத்துறை மூலம் சமூக மாற்றத்துக்காக உழைத்த வசீம் அவரைப்போன்ற ஏனைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார்.
வசீம் அக்ரம் அவர்களின் எழுத்து தனித்துவமானது. பல்வேறு தலைப்புக்களில் ஆய்வு ரீதியானதும் சுவாரஷ்யமானதுமான கட்டுரைகளை எழுதியுள்ளார். “நியாயம்மாரே…” என்ற சமூகத்தில் கலந்துரையாடப்பட வேண்டிய பல விடயங்களை கருப் பொருளாகக் கொண்டு இவரினால் ஆக்கப்பட்ட கவிதைகள் ஏராளம்.
ஊடகத்துடன் மாத்திரம் தனது பணியை சுருக்கிக்கொல்லாத இவர், தனது குடும்ப பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஊரில் இடம்பெற்ற சகல நிகழ்வுகளிலும் பங்கெடுத்தார். எப்பொழுதும் இன்முகத்துடன் காணப்படும் வசீம், அவரிடம் ஒப்படைக்கப்பட்ட எவ்வளவு கடினமான கரியத்தையும் மனதார ஏற்று அதனை செய்துகாட்டினார்.
IMG_20140731_WA0013
அவரின் பிரிவை புத்தளம் ஒன்லைன் குழுமம் பேரிழப்பாக கருதினாலும், பிரியாவிடை நிகழ்வின்போது எமக்கு மத்தியில் பேசிய வசீம் புத்தளம் ஒன்லைன் மீதுகொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தியதுடன் கத்தார் சென்றதன் பின்னரும் இந்த ஊடகத்தை வளர்த்தெடுப்பதற்கு தான் வைத்துள்ள திட்டங்களை விளக்கியபோது நாம் பெரிதும் மகிழ்வடைந்தோம்.
அல்லாஹ் அவரின் பயணத்தை பாதுகாப்பானதாக ஆக்கிவைப்பானாக. அவரின் பொருளாதார குடும்ப சுமைகளை நீக்கி, இன்னும் இன்னும் சமூகப்பணிகள் புரிந்திட அவருக்கு உதவுவானாக.
நாடும் ஊரும் நமக்கென்ன செய்தது என்ற எண்ணமின்றி
நாட்டுக்கும் ஊருக்கும் நாம் என்ன செய்தோம் என்ற எண்ண உணர்வில்
நாட்டு நலனுக்காய் உழைக்க துடிக்கும்
நல்லவர்களில் ஒருவனாகிய வசீகர வசீமே
உன் வயதோ சிறியதப்பா!
உன் இலட்சிய உணர்வுகளோ பெரியதப்பா!!
வானமே எல்லையாகி பரந்துவிட்ட உன் ஆவல்
கடல் கடந்து சென்றிடினும் விடாது தொடருமப்பா
புத்தளம்ஒன்லைன் பெற்ற அரியதொரு பொக்கி ஷமே
நீ எங்கு சென்றிடினும் எம் பிரார்த்தனை தொடருமப்பா!!
நன்றி : Puttalamonline.


Post a Comment

0 Comments