அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த சனிக்கிழமை
பறக்கும் தட்டு எனக் கூறப்படும் எல்.டி.எஸ்.டி எனும் வேகக்குறைப்பான் ஒன்று
வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
குறை அடர்த்தியில் ஒலியை விட வேகமாகப் பறக்கும் பொருளின் வேகத்தை
கட்டுப்படுத்தும் எல்.டி.எஸ்.டி எனும் இவ்வேகக் குறைப்பான் ஹவாயிலுள்ள
அமெரிக்க விமானப்படைத் தளத்தில் சோதனை செய்யப்பட்டது.
பலூனூடன் இணைத்து அனுப்பட்ட எல்.டி.எஸ்.டி பின்னர் பிரிந்து மணிக்கு
சுமார் 3000 கி.மீ எனும் வேகத்துக்கு கட்டுபடுத்தப்பட்டுள்ளதாக நாஸா
தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரக ஆராய்ச்சயில் இதன் பயன்பாடு மிக அவசியமாக
இருக்கும் எனக் கூறப்படுகின்றது.
இருப்பினும் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் தற்போது இதனை
பயன்படுத்தப்போவதில்லை எனவும் மேலும் இரு எல்.டி.எஸ்.டி சோதனை
செய்யப்படவுள்ளதாகவும் நாஸாவின் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

0 Comments