பிரேஸிலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு பெல்ஜியம் மற்றும் ஆர்ஜன்டீன அணிகள் தகுதிப் பெற்றுள்ளன.
காலிறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெறும் ‘சுப்பர் 16′ அணிகளுக்கான போட்டிகள் இன்று அதிகாலையுடன் நிறைவுப் பெற்றன.
இன்று அதிகாலை சல்வடோரில் நடைபெற்ற போட்டியில் பெல்ஜியம் மற்றும் அமெரிக்கா அணிகள் களமிறங்கின.
இரு அணிகளும் போட்டியின் ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் போட்டியின் இறுதி நிமிடம் வரை இரு அணிகளும் கோலெதனையும் போடவில்லை.
இதனால் மேலதிக நேரம் 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
இதன்போது பெல்ஜியத்தின் கெவின் டி புரூனே கோலொன்றை போட 105 ஆவது நிமிடத்தில் ருமெலு லுக்காக்கு கோலொன்றை போட்டார்.
இதனடிப்படையில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது
எனினும் 107 ஆவது நிமிடத்தில் அமெரிக்க அணி வீரர் ஜூலியன் கிறீன் அடித்த கோல் ஒன்றே அமெரிக்கா அணிக்காக பதிவானது.
இதன்பிரகாரம் போட்டியில் 2 -1 என்ற கணக்கில் வெற்றியீட்டிய பெல்ஜியம் அணி காலிறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்றுக்கொண்டது.
இதேவேளை சாவோ பாலோவில் நேற்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் ஆர்ஜன்டீனா மற்றும் ஸ்விட்ஸர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டி நேரமான 90 நிமிடங்களிலும் இரண்டு அணிகளும் கோல் எதனையும் போடாத காரணத்தினால் மேலதிகமாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
மேலதிக நேரம் வழங்கப்பட்டு 118 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனாவின் டி மரியா போட்ட கோலான்றினால் ஆர்ஜன்டீனா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
எனினும் போட்டியின் இறுதி நேரம் வரை ஸ்விட்ஸர்லாந்து அணியினால் கோலெதனையும் போட முடியாமல் போனது.
இதனடிப்படையில் ஸ்விட்ஸர்லாந்து அணியை 1-0 பூச்சியம் என்ற கணக்கில் வெற்றிகொண்ட ஆர்ஜன்டீனா அணி காலிறுதிக்கு தகுதிப் பெற்றது.


0 Comments