அளுத்கம கலவரம் தொடர்பில் நான் அல்லது பொதுபல சேனாவின் இதர
உறுப்பினர்கள் குற்றவாளிகள் என்றால் பொலிஸார் எம்மைக் கைது செய்யட்டும் என
பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடத்த ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று (01) நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
அளுத்கம கலவரம் எதிர்பாராத விதமாக நடைபெற்ற துரதிர்ஷ்டமான
சம்பவமாகும்.அப்படியிருக்க,சில அமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவர்
உட்பட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்களும் எம்மைக் குற்றவாளிகள் என்கின்றனர்.
அப்படியாயின் பொலிஸார் எம்மைக் கைது செய்யட்டும் என்றார்


0 Comments