Subscribe Us

header ads

அல் அக்ஸாவின் மூடப்பட்டிருந்த ஆண்கள் விடுதி மூன்று மாணவர்களுடன் மீண்டும் திறக்கப்பட்டது.

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மணவர் சங்கத்தின் உதவியுடன் பல வருடங்களாக மூடப்பட்டிருந்த ஆண்கள் விடுதி மூன்று மாணவர்களுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.கடந்த 25.06.2014 அன்று அதிபர் திருமதி.M.B.M. ரோஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கல்ந்துரையாடலின் பின்னர் தெரிவுசெய்யப்பட்ட பத்து மாணவர்களின் பெற்றோருடன் இடம்பெற்ற சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவின் படி கடந்த 30.06.2014 அன்று 3 மாணவர்களுடன் திரு.அபுஹர் ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் விடுதி திறக்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.இதனை கண்ணுற்ற இன்னும் சில மாணவர்களும் தவணை விடுமுறையினை தொடர்ந்து இணைந்து கொள்ள உள்ளதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

இவ்விடுதி மாணவர்களுக்கும் இன்னும் சில தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்குமான விஷேட வகுப்புகள் அதிபர் அவ‌ர்களின் முயற்சியின் பேரிலும் பழைய மாணவர்கள் சிலரின் உதவியுடனும் இடம்பெற்றுவருகின்றன. ஆண்கள் விடுதியின் ஆரம்பத்தை தொடர்ந்து சில பெண் பிள்ளைகளின் பெற்றோரும் தங்களது பெண் பிள்ளைகளும் விடுதியில் தங்கி கல்வி கற்க விருப்பம் தெரிவித்துள்ளதால் அதற்கான ஆரம்ப கட்டபணிகளும் நடைபெற்று வருகின்றன.

M.B. Arshath
Secretary 
OBA


Post a Comment

0 Comments