ஒரு கையை இழந்த அமெரிக்க அழகுராணியொருவர், மாற்றுத் திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
நிகோல் கெலி எனும் இந்த யுவதி பிறக்கும்போதே இடது கையில் முழங்கைக்கு கீழான பாகம் இருக்கவில்லை.
ஆனாலும், ஏனையோரைப் போன்றே தன்னாலும் சாதிக்க முடியும் என தன்னம்பிக்கையுடன் வளர்ந்த அவர், கடந்த வருடம் அமெரிக்காவின் அயோவா மாநில அழகுராணி போட்டியில் பங்குபற்றினார். இப்போட்டியில் நூற்றுக்கணக்கானோரை தோற்கடித்து, மிஸ் அயோவா அழகுராணியாக அவர் முடிசூட்டப்பட்டார்.
23 வயதான நிகோல் கெலி, நெப்ரஸ்கா பல்கலைக்கழகத்தில் இணைந்து 2012 ஆண்டில் பட்டதாரியானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உடற்குறைபாடுகள் கொண்ட ஏனைய சிறுமிகளுக்கு மாற்றுத்திறன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நிகோல் கெலி பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். பாடசாலைகளில் மாற்றுத்திறனாளிகள் குறித்து உரையாற்றுவதற்கு தனது புகழை அவர் பயன்படுத்திக்கொள்கிறார்.
நான் வளர்ந்தபோது, மக்களிடமிருந்து நான் எதிர்கொண்ட வெறித்த பார்வையை சமநிலைப்படுத்துவதற்கு கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால், நான் பேஸ்போல் விளையாட்டு, நடனம், டைவிங், உட்பட பலதுறைகளிலும் ஈடுபடுவதற்கு நான் முயற்சித்தேன். நான் முயன்று பார்க்காத விடயம் எதுவுமில்லை' என நிகோல் கூறுகிறார்.
மாற்றுத்திறனாளிகளான சிறார்களின் பெற்றோர்களையும் சந்தித்து உரையாடுகிறார் நிகோல் கெல்லி.
மாற்றுத்திறனாளிகளான பிள்ளைகளை பாதுகாப்பது குறித்து அவர்களின் பெற்றோர்கள் மிகுந்த கவலை கொள்கின்றனர். அப்பிள்ளைகள் தமக்குத் தேவையான அனைத்தும் செய்துகொள்ள முடீயம் என்ற நம்பிக்கையை பெற்றோர்களிடத்தில் ஏற்படுத்த முடியும் என்பதை நான் அவதானித்துள்ளேன்' என நிகோல் கெலி கூறுகிறார்.
✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice


0 Comments