எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத்
இன்றைய இளைஞர்களுக்கு ஏதோ ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற வேகமும் ஆசையும் மனதுக்குள் தினம் தினம் தளிர் விட்டுக் கொண்டே இருக்கின்றன.
எங்களாலும் முடியும் நாங்களும் சாதித்துக் காட்டுவோம் என்ற வேகத்தில் செயற்பட்டு சமூகத்தில் சாதித்துக்காட்டிய இளைஞர்களும் எம்மத்தியில் இல்லாமலில்லை. பாடசாலைக் காலத்தில் ஆரம்பித்த நட்பு தமக்குள் இருந்த திறமைகளை சரியாக இனங் கண்டு தங்களது கையடக்கத் தொலைபேசியினால் ஒரு குறுந்திடைப்பத்தை தயாரித்து தங்களாலும் முடியும் என்பதை நிரூபித்துக்காட்டிய முன்று இளைஞர்கள் எமது காரியாலயத்துக்கு வந்தனர்.
அவர்களோடு உரையாடிய சில விடயங்களை உங்களோடு பரிமாறிக் கொள்கின்றோம்.
நாங்க இதற்கு முதலும் இரண்டு ஷோர்ட் பிலிம் பண்ணிருக்கம். அது இரண்டையும் விட பெஸ்ட்டா ஒன்னு பண்ணனும் என்று யோசிச்சம். அப்புறமாத்தான் நாங்க "தப்பேதுமில்லை" என்ற ஷோர்ட் பிலிம் பண்ணினோம். இது தான் நாங்க ஒபிசலா வெளியிட்ட முதலாவது ஷோர்ட் பிலிம் என்றார் சேது. எங்களுக்கு இந்தப் படம் பண்ண எல்லா ஐடியாவும் கொடுத்தது நம்ம தலைதான் என்று நதீஷன் பக்கம் கையை காட்டினார் சேது.
ஏற்கனவே இரண்டு படம் பண்ணிருக்கம். வேறு ஏதாவது ஒரு டிபரன்டான கதைல ஒரு படம் பண்ணனும்னுதான் இதுக்கான ஸ்கிரிப்ட எழுதினேன். நான் ஒரு ஸ்டூடியோ வெச்சிருக்கேன். சஞ்சேய் அங்கதான் எடிட்டரா இருக்காரு. சேது ஒரு கம்பனியில் வேர்க் பன்றாரு. எங்களுக்குள் இருக்கின்ற திறமைகளை நாங்க ஸ்கூல் டைம்லயே இனங்கண்டு கொண்டிருந்தோம். எங்களாலையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் செய்தோம்.
ஸ்கூல் டைம்ல இருந்தே எனக்கு எடிட்டிங் பக்கம் ரொம்ப விருப்பம். நாங்க ஸ்கூல் படிக்கும் போதே ஒரு படம் பண்ணிருக்கம் ஆனா ஏ லெவல் முடிஞ்சதுக்கப்பறம் எல்லாரும் பிரிஞ்சி ஊருகளுக்கு போய்விட்டோம். வேலைக்காக கொழும்புக்கு வந்தப்புறம் திரும்ப எல்லாரும் செட்டானோம். அப்புறம்தான் இந்த பிலிம் என்றார் சஞ்ஜேய்.
இளைஞர்களுக்கு ஒரு படைப்பினை உருவாக்கும் போது பொருளாதாரம் தான் பெரிய தாக்கம் செலுத்தும.; அது உங்களுக்கு எப்படி இருந்தது என அவர்களிடம் கேட்டோம், "இல்லண்ணா எங்களுக்கு அந்தக் கஷ்டமே இருக்கல்ல. போன்ல தான் நாங்க இந்த பிலிம்ம எடுத்தோம், நடிச்சது சேதுவும், தர்ஷனும். நதீஷன்ட ஸ்டூடியோவ யூஸ் பண்ணிக்கிட்டோம். நான் எடிட்டிங் செய்தேன்" என்றார் சஞ்ஜேய்.
இளைஞர்கள் எனும் போது இப்போது குறுந்திரைப்படம் தயாரிக்க வேண்டும், அவற்றில் சாதிக்கவேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். ஏன் உங்களுக்கும் இந்த துறையிலேயே சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் வந்தது என்று கேட்டதற்கு, "இலங்கையில் நல்லதோர் தமிழ் படம் வரணும். இலங்கையில் பெயர் சொல்லுற அளவுல நல்ல தமிழ் படமென்று இல்ல. எங்களுக்குள் இருந்து நல்ல பிலிம் ஒன்னு வரணும். அது தான் எங்க கனவு. இலங்கையில் எங்களைப் பார்க்க ரொம்ப திறமைசாலிகள் இருக்காங்க. எல்லோருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது குறைவு. சந்தர்ப்பம் கிடைத்தால் நல்ல தயாரிப்புகள் வெளிவரலாம். எங்களால் முடியுமான வகையில் நாங்க எங்களோட முயற்சியை செய்திருக்கிறோம்.
இனி குறும்படமில்லாமல் ஒரு முழுநீளப்படத்தை தயாரிக்கிறது தான் எங்களுடைய டார்கெட்டா இருக்கு என்று அவர்கள் மிகவும் ஆர்வமாக தமது கனவுகளை எங்களோடு பரிமாறிக் கொண்டனர்.
நாங்க இதுவரைக்கும் எடுத்த பிலிம் எல்லாம் இந்தியா சினிமா பாணியில்தான்
எடுத்திருக்கிறோம். காலப்போக்கில் எங்களுக்கான ஒரு அடையாளத்தை நிரூபித்துக் காட்டிய பிறகு எங்களுக்கான சில தனித்துவப்பாணில் எங்கள் தயாரிப்புகளை கொடுப்போம்.
தப்பேதுமில்லை என்ற உங்களோட குறுந்திரைப்படம் பற்றி சில தகவல்கள் சொல்லலாமே..... உண்மையில் இந்த குறும்படம் ஒருத்தர் ஒரு விசயத்தால் பாதிக்கப்பட்டார் என்றால் அவர் அந்த பாதிக்கப்பட்ட விசயத்துக்குள்ளேயே தள்ளப்படுவார் என்பது தான் கதை. ஒரு இளைஞர், ஒருவரை ஏமாற்றி அவரிடம் உள்ள பொருட்களை கொள்ளையிடுறார். அப்படி பாதிக்கப்பட்ட அவர், அதே வழியில் கொள்ளையிட்டு பழகுகிறார். இது தான் கதையின் சுருக்கம்.
இன்னும் எதிர்காலத்துல புதிய பல படைப்புகளை கொடுக்கணும் என்று ஆசைப்படுகிறோம். எங்களுக்கு துறைசார்ந்தவர்களின் அறிமுகம் ரொம்பக் குறைவு. எங்களுக்கு நல்லபடம் பண்ண தயாரிப்பாளர்கள் இல்லை. எங்களுக்கு நல்ல தயாரிப்பாளர்கள் கிடைத்தால் ரொம்ப நல்ல படைப்புகளை கொடுப்போம். எங்களோட இலட்சியம் இலங்கையில் சிறந்த திரைப்படங்களை உருவாக்கவேண்டும் என்பதுதான்" எனக்கூறி புன்னகையுடன் விடைபெற்றார்கள் அந்த இளைஞர்கள்.
தப்பேதுமில்லை குறும்படத்தினை https://www.youtube.com/watch?v=TBhEkiKuchEஎன்ற முகவரியினூடாக யூடியூப்பில் காணமுடியும்.
✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice

இனி குறும்படமில்லாமல் ஒரு முழுநீளப்படத்தை தயாரிக்கிறது தான் எங்களுடைய டார்கெட்டா இருக்கு என்று அவர்கள் மிகவும் ஆர்வமாக தமது கனவுகளை எங்களோடு பரிமாறிக் கொண்டனர். நாங்க இதுவரைக்கும் எடுத்த பிலிம் எல்லாம் இந்தியா சினிமா பாணியில்தான்
எடுத்திருக்கிறோம். காலப்போக்கில் எங்களுக்கான ஒரு அடையாளத்தை நிரூபித்துக் காட்டிய பிறகு எங்களுக்கான சில தனித்துவப்பாணில் எங்கள் தயாரிப்புகளை கொடுப்போம்.
தப்பேதுமில்லை என்ற உங்களோட குறுந்திரைப்படம் பற்றி சில தகவல்கள் சொல்லலாமே..... உண்மையில் இந்த குறும்படம் ஒருத்தர் ஒரு விசயத்தால் பாதிக்கப்பட்டார் என்றால் அவர் அந்த பாதிக்கப்பட்ட விசயத்துக்குள்ளேயே தள்ளப்படுவார் என்பது தான் கதை. ஒரு இளைஞர், ஒருவரை ஏமாற்றி அவரிடம் உள்ள பொருட்களை கொள்ளையிடுறார். அப்படி பாதிக்கப்பட்ட அவர், அதே வழியில் கொள்ளையிட்டு பழகுகிறார். இது தான் கதையின் சுருக்கம்.
இன்னும் எதிர்காலத்துல புதிய பல படைப்புகளை கொடுக்கணும் என்று ஆசைப்படுகிறோம். எங்களுக்கு துறைசார்ந்தவர்களின் அறிமுகம் ரொம்பக் குறைவு. எங்களுக்கு நல்லபடம் பண்ண தயாரிப்பாளர்கள் இல்லை. எங்களுக்கு நல்ல தயாரிப்பாளர்கள் கிடைத்தால் ரொம்ப நல்ல படைப்புகளை கொடுப்போம். எங்களோட இலட்சியம் இலங்கையில் சிறந்த திரைப்படங்களை உருவாக்கவேண்டும் என்பதுதான்" எனக்கூறி புன்னகையுடன் விடைபெற்றார்கள் அந்த இளைஞர்கள்.
தப்பேதுமில்லை குறும்படத்தினை https://www.youtube.com/watch?v=TBhEkiKuchEஎன்ற முகவரியினூடாக யூடியூப்பில் காணமுடியும்.
✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice

0 Comments