Subscribe Us

header ads

தேர்தல்களில் போட்டியிடாத முழுநேரமிருந்து செயலாற்றக் கூடியவரே பொதுச் செயலாளர் பதவியில் இருக்க வேண்டும்.

(அஷரப் ஏ சமத்)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பொதுச் செயலாளராக இருப்பவர்கள் ஒருபோதும் அமைச்சராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பிணராகவோ பதவி வகிக்காமல் தேர்தல்களில் போட்டியிடாத முழுநேரமிருந்து செயலாற்றக் கூடியவரே செயலாளர் பதவியில் இருக்க வேண்டும்.
என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச புதிய யோசனை ஒன்றை கடந்த ஞயிறு மவ்பிம சிங்கள பத்திரிகையின் நேர்காணலின்போது பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பசிலின் இக் கருத்தினால் தற்போதைய கட்சியின் செயலாளரும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனா தமது செயலாளர் பதவியை இழக்க வேண்டி வருமோ என குழம்பிப்போயுள்ளார்.

கடந்த ஜக்கிய மக்கள் சுதந்திர முன்ணனியின் 20 வருட ஆட்சிக் காலத்தில் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் செயலாளராக கடந்த 15 வருடகாலமாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவே செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மஹிந்தவின் ராஜபக்சவின் 10 வருட ஆட்சிக்காலத்தில் இருந்து வருகின்றார்.

அத்துடன் அடுத்த அமைச்சரவையின் மாற்றங்கள் நடைபெற்றால் பிரதம மந்திரி பதவியை அவர் எதிர்பார்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மைத்திரிபால சிறிசேனா பிரதம மந்திரி பதவி கேட்பதை கைவிடுவதற்காக மேற்கண்ட கருத்தை சூழ்ச்சியமாக பசில் தெரிவித்துள்ளார். என சிங்கள இணையத்தளமொன்றும் தெரிவித்துள்ளது.

மேலும் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளாவது-
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆட்சிக் காலத்தில் ஜக்கிய தேசியக் கட்சியில் பொதுச் செயலாளர் மற்றும் பொருலாளர் பதவிகளில் ஒருபோதும் பாராளுமன்ற உறுபபினர் அல்லது அமைச்சரவை பதவி வகித்தவர்களை இப் பதவிகளில் அமர்த்தவில்லை முழுநேரமாக இயங்கக் கூடியவரையே வைத்து கட்சி செயற்பாடுகளை முன்னெடுத்தார்.
இதனை தானும் வரவேற்பதாகவும் இதனையே ஸ்ரீ.ல.சு.கட்சி செயலாளர் பதவிக்கு செயற்படுத்தவேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments