Subscribe Us

header ads

ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 3 வெளிநாட்டு ஆலோசகர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் வெளியே இன்று காலை தீவிரவாதி தற்கொலை தாக்குதல் நடத்தினான். அவன் தனது உடலில் கட்டிய குண்டுகளை வெடிக்க செய்தான். அதில், 3 வெளிநாட்டு ஆலோசகர்கள் உடல் சிதறி பலியாகினர். 

மேலும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மொழி பெயர்ப்பாளர் ஒருவரும் உயிரிழந்தார். இத்தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை.

Post a Comment

0 Comments