Subscribe Us

header ads

பூஜைக்காக எண்ணெய் தடவுவதாகக் கூறி யுவதியிடம் பாலியல் சேட்டை செய்த மந்திரவாதி

ஆணமடுவை, குருபொக்குனுகம பிரதேசத்தில் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உடபடுத்திய குற்றச்சாட்டில்  நேற்று முன்தினத் மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

ஆணமடுவை கொன்வல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான மந்திரவாதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

18 வயதான யுவதி ஒருவரே  இவ்வாறு  இவரால் பாலியல்  துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.


சந்தேகநபர் தேவாலையம் ஒன்றை நடாத்திவந்துள்ளார் குறித்த தேவாலையத்துக்கு வருபவர்களின் வீட்டுக்கு சென்று பூஜைகளையும் செய்துவந்துள்ளார்.

குறித்த பூஜையின் போது அவரிடம் பூஜைக்காக வருபவர்களின் உடலில் எண்ணெய் தடவி அவர்களுக்கு பூஜை செய்து வந்துள்ளார்.

குறித்த யுவதிக்கு இவ்வாறு எண்ணெய் தேய்க்கும் போது அவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கியுள்ளார் என்பது விசாரணைகளின் போது  தெரியவந்துள்ளது.  இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments