Subscribe Us

header ads

1000 வருடங்கள் பழைமையான அரேபியக் கப்பல் மீட்பு

தாய்லாந்தின் சமுத் சகொன் மாகாணத்திலுள்ள இறால் பண்ணை ஒன்றில் 1000 வருடங்கள் பழைமையான அரேபிய கப்பல் ஒன்று அண்மையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 11ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இக்கப்பல் சரக்கு பொருட்களை கொண்டுசெல்வதற்காக ஆசியக் கண்டத்தின் கரையோரப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைமையான கப்பல் இதுவாகும். 25 மீற்றர் நீளமான இக்கப்பலை புனர் நிர்மாணம் செய்யும் நிலையில் உள்ளதாக நீரின் கீழான தொல்பொருள் ஆராய்ச்சியாளரான எர்ப்ரெம் வட்சரங்குல் குறிப்பிட்டுள்ளார்.

இக்கப்பலை மீட்கும் பணிகளில் தற்போது 10 சதவீதமானவையே முடிவடைந்துள்ளது. இதன் மீட்புப் பணிகள் கடந்த வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments