Subscribe Us

header ads

காஸாவில் பலியானோர் 501 ஆக அதிகரிப்பு

இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் காஸாவில் பலியானோர் எண்ணிக்கை 501 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து அங்கு உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் அடிக்கடி மோதலும் எதிர்த் தாக்குதலும் நடைபெற்று வருகிறது. கடந்த 13 நாட்களாக நடந்து வரும் தாக்குதலில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக, இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதலில் காஸாவைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 501 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

பதற்றம் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 15 நாடுகளின் உறுப்பினர்கள் உடனான அவசர பேச்சுவார்த்தைக் கூட்டம் நேற்று இரவு கட்டாரில் நடைபேற்றது. அதில், காஸாவில் தற்போது உள்ள நிலைக்கு முடிவு காண வேண்டும் என்பது குறித்து பேசப்பட்டது. 

அப்போது, கடந்த 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் உடனான ஒப்பந்தப்படிää அங்கு போர் நிறுத்தம் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அங்கு உரையாற்றிய கட்டார் வெளியுறவுத் துறை அமைச்சர் கலேத் அல் , “இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலுக்கும் ஹமாஸ் மற்றும் ஜிகாத்தின் ஏவுகணைத் தாக்குதலுக்கு முடிவு ஏற்படுத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

ஆனால், காஸாவில் கடந்த இரு வாரங்களில் 18 இஸ்ரேல் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அதனால் தாக்குதல் நீடிக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ தெரிவித்துள்ளார். இதனிடையேää அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அறிவுறுத்தலின் பேரில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோன் கொரி, இந்த விவகாரம் தொடர்பாக பேச எகிப்து விரைந்துள்ளார்.

முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் பேசும்போது, "காஸாவில் இராணுவ நடவடிக்கை விரிவுபடுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். 2012ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் இருதரப்பினரும் விரைவில் மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்ளும் வகையில் எகிப்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து துணை நிற்கும்” என்று அவர் கூறியதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments