லிபியாவில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
தெரிவித்துள்ளது.
லிபியாவில் இடம்பெறும் மோதல்கள் மற்றும் இலங்கைப்
பிரஜைகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய
தெரிவித்தார்.
இதுவரை, லிபியாவில் பாதிப்புக்குள்ளான 14 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து
மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
நலன்புரி அமைச்சரின் பணிப்புரைக்கமைய லிபியாவில் உள்ள அனைத்து
இலங்கையர்களையும் நாட்டுக்கு அழைத்துவர தீர்மானிக்கப்பட்டதாக அவர்
கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு கெய்ரோவிலுள்ள
தூதரகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், தரவுகளுக்கு அமைய மேலும் 200
இலங்கையர்கள் லிபியாவில் தங்கியுள்ளதாகவும் பணியகம் தெரிவிக்கின்றது.
இவர்களை
விரைவில் இலங்கைக்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கையினை வெளிநாட்டு
வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நலன்புரி அமைச்சு
ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
லிபியால்
தற்போது காணப்படுகின்ற நிலை பாதுகாப்பற்றதாகவும், அபாயகரமாகவும்
காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதிப்
பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய மேலும் தெரிவித்தார்.


0 Comments