Subscribe Us

header ads

காத்தான்குடி நகர சபை அமர்வின் போது சுலோக அட்டையுடன் அதிரடியாக நுழைந்த சல்மா ஹம்ஸா

(காங்கேயனோடை நிருபர்)

காத்தான்குடி நகர சபை அமர்வின் போது  நகர சபை உறுப்பினர் திருமதி சல்மா ஹம்ஸா பேருவளை, அளுத்கமைச் சம்பவங்கள் தொடர்பில் தனது கண்டனத்தை வெளிப்படுத்தும் சுலோகமொன்றை தாங்கிய நிலையில் காத்தான்குடி நகர சபையின் விசேட  அமர்வில் அதிரடியாக நுழைந்து கலந்து கொண்ட சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி நகர சபையின் விசேட  அமர்வு  விசேட காத்தான்குடி நகர சபை மண்டபத்தில் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர்  தலைமையில் நடைபெற்றது. இதன் போதே காத்தான்குடி நகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் திருமதி சல்மா ஹம்சா அளுத்கம மற்றும் தர்கா நகரில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களுக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் சுலோகமொன்றை தாங்கி அமர்வில் கலந்து கொண்டார்.

 காத்தான்குடி நகர சபையின் இந்த அமர்வின் போது  நகர சபை உறுப்பினர்
எச்.எம்.எம்.பாக்கீரினால்   முன்வைக்கப்பட்ட பொது பல சேனா தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பிரேரணை திருததங்களுடன் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இலங்கையில் இனவாதத்தை தூண்டி வரும் பொது பலசேனா எனும் அமைப்பை ஒரு பங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தி அதை தடை செய்ய வேண்டும்.

Post a Comment

0 Comments