பாணந்துறையில் உள்ள நோ லிமிட் ஆடை விற்பனை நிலையத்தின் கூரை மீது ஏறி வந்தவர்களே அந்த நிறுவனத்திற்கு தீயிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பொலிஸார் கூறுவது போல் மின் ஒழுக்கு காரணமாக நோ லிமிட் நிறுவனத்தின் விற்பனை நிலையத்தில் தீ பரவவில்லை எனவும் இனந்தெரியாத நபர்கள் இந்த தீயை மூட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் நிறுவனத்திற்கு பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் வன்முறையாளர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மங்கள சமரவீர இன்று காலை, சம்பவம் இடம்பெற்ற நோ லிமிட் நிறுவனத்தின் விற்பனை நிலையத்திற்குச் சென்று பார்வையிட்டு, அதன் உரிமையாளருடன் உரையாடிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் சம்பவம் நடத்த இடத்திற்கு அமைச்சர் பவுசி, ரிசாத் பதியுத்தீன், ரெஜினோல்ட் குரே, மற்றும் ரவுப் ஹகீம் ஆகியோர் உடனடியாக வருகை தந்தது குறிப்பிடத்தக்கது .








0 Comments