நடைபெற்று வரும் உலக கிண்ண கால்பந்து போட்டியில் ஆக்ரோசமான ஆட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ரசிகர்கள் தங்களது ஆதரவு அணிகளை அரங்கில் இருந்து அலங்காரங்களுடன் ஆரவாரப்படுத்துகின்றனர்.
ஆனால் இதுவரை கால்பந்து உலகமே கண்டிராத வகையில் நடந்துகொண்டு ஜப்பானை உலக அரங்கில் ஒரு படி மேலே உயர்த்திருக்கிறார்கள் அவ்வணியின் ரசிகர்கள்.
கால்பந்து போட்டிகளில் வெற்றி, தோல்வியின் பின்னர் ரசிகர்கள் மோதிக்கொள்வது அடிக்கடி இடம்பெறும். ஆனால் தாம் ஆதரித்த அணி தோல்வியடைந்த பின்னரும் தாம் அமர்ந்திருந்த அரங்கினை துப்பரவு செய்து கால்பந்து உலகின் புதுமையான ரசிகர்களாக மாறியுள்ளனர் ஜப்பான் கால்பந்து ரசிகர்கள்.
உலக கிண்ண கால்பந்து தொடரில் ஜப்பான் தனது முதற் போட்டியில் கடந்த 15ஆம் திகதி ஐவரி கோஸ்டிடம் 2-1 என்ற ரீதியில் தோல்வியடைந்தது. இப்போட்டியின் முடிவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜப்பான் ரசிகர்களின் இச்செயற்பாடு கால்பந்து உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனால் போட்டியில் தோல்வியடைந்த ஜப்பான் உலக அரங்களில் மரியாதை வெற்றி கொண்டுள்ளது.
ஜப்பானியர்களின் செயற்பாட்டை இணையத்தில் ஜப்பானியர்கள் என்றும் ஜப்பானியர்கள் தான், அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் என பலரும் புகழ்ந்துள்ளனர்.
அதேவேளை தோல்வியின் பின்னர் ஜப்பான் அணி தனது ரசிகர்களை நோக்கி வருத்தம் வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

0 Comments