Subscribe Us

கற்பிட்டியில் நாளை ஹர்தால் அனுஷ்டிக்கப்பட உள்ளது.



அளுத்கம, தர்காநகர், வெலிப்பென்ன மற்றும் பேருவளை போன்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாத செயற்பாடுகளை கண்டிக்கும் முகமாக கற்பிட்டியில் நாளை வெள்ளிக்கிழமை ஹர்தால் அனுஷ்டிக்கப்பட உள்ளது. 


இதனால் நாளை அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி கடைகளுக்கு முன் கருப்பு கொடிகளை பறக்க விட்டு அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வெளியிட உள்ளனர் கற்பிட்டி மக்கள்.


கற்பிட்டி வர்த்தக சங்கம் மற்றும் கற்பிட்டி முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் ஆகியன இணைந்து இந்த துக்க தினம் மற்றும் ஹர்த்தாலுக்கு அழைப்புவிடுத்திருந்தன.
(நமது நிருபர்)

Post a Comment

1 Comments

  1. You are late but not too late ....... very good go ahead

    ReplyDelete