-பா.சிகான் -
தென்னிலங்கையில் முஸ்லிம் மக்களுக்கெதிராக நடந்த வன்முறைச்
சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால்
அமைதிவழியிலான கண்டனப் போராட்டம் இன்று நண்பகல் நடாத்தப்பட்டது.
இன்று வியாழக்கிழமை ஒரு மணி நேர அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுக்கவுள்ளதாக ஏற்கனவே
அறிவிப்பினை நேற்று விடுத்திருந்தது. இப்போராட்டத்திற்கு
யாழ்.பல்கலைக்கழத்தின் அனைத்துப்பீடங்களும்;இ ஆசிரியர்; சங்கம் மற்றும்
கல்வி சாரா ஊழியர் சங்கங்கள் ஆதரவை வழங்கியிருந்தன.
முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும்இ மேற்படித்
தாக்குதல் சம்பவம் தொடர்பாக உரிய தரப்பினர் மீது நடவடிக்க வேண்டுமெனவும்
அங்குள்ள மக்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்இ இனிவரும்
காலங்களில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறாதவாறு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை
முன்னெடுக்க யாழ்.பல்கலைக்கழக சமூகம் முடிவு செய்திருந்தது.
இதன்படி இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணியில் இருந்து ஒரு
மணிவரைக்கும் யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் அடையாளப்போராட்டம்
நடத்தப்பட்டிருந்தது. பல்கலைக்கழக வளவினுள் ஊர்வலமாகப் புறப்பட்ட அவர்கள்
பிரதான நுழைவாயிலை வழிமறித்து இப் போராட்டத்தினை நடத்தியிருந்தனர்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து முஸ்லீம் மாணவ மாணவிகள் பெருமளவினில் பங்கெடுத்திருந்தனர்.
நீண்டதொரு இடைவெளியின் பின்னராக முஸ்லீம் மக்களிற்காக யாழ்.பல்கலையினில்
இத்தகைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எனினும் தமிழ் மாணவர்கள் கணிசமானளவில் போராட்டத்தில்
பங்குபற்றவில்லையாயினும் முஸ்லிம் மாணவர்களிலும் ஒருசில மாணவர்கள் ஒதுங்கி
நின்றமையைக் காணமுடிந்தது.madawalanews






















0 Comments