Subscribe Us

header ads

நோன்புப் பெருநாள் மைதானத் தொழுகை கொத்பா; காஸாவுக்காக புத்தளம் மக்களின் ஆதரவைத் தெரிவிக்கும் விசேட நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்


அல்லாஹ்வின் பெரும் கிருபையினால் புத்தளம் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு மைதானத்தில் ஒன்றுகூடும் பெருநாள் மைதான தொழுகை கொத்பா, 2014.07.29 செவ்வாய்கிழமை, சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெறும்.


அன்றைய தினம் நடைபெறவுள்ள நிகழ்ச்சியின் நிரலை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.

6.30 :- தக்பீர் ஓதல் ஆரம்பம்
6.45 :- பெருநாள்த் தொழுகை
7.00 :- கொத்பா உரை
7.30 :- காஸாவுக்காக புத்தளம் மக்களின் ஆதரவும் இஸ்ரவேலுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கும் நிகழ்ச்சி பற்றிய அறிமுகம்
7.35 :- புத்தளம் மக்களின் காஸா பிரகடணம் (தமிழ் சிங்களம் இரண்டு மொழிகளிலும்)
இச் சந்தர்ப்பத்தில் பின்வரும் விடயங்கள் மேற்கொள்ளப்படும்:
** இலங்கை, பலஸ்தீன் தேசியக் கொடிகளைக் கைகளில் ஏந்தி அசைத்தல்
** தலையில் Free Gaza பட்டியைக் கட்டியிருத்தல்
** Free Gaza டீஷர்ட்டை அணிந்திருத்தல்
** பிரகடணத்தின் ஒவ்வொரு வசனத்தின் முடிவிலும் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கோஷம் எழுப்புதல்
** காஸா ஆதரவு பதாதைகளைக் கைகளில் ஏந்திக் காட்டுதல்
** காஸா, பலஸ்தீன் படங்களைக் கைகளில் ஏந்திக் காட்டுதல்
7.50 :- வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுதல் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பணம்
8.00 :- நிறைவு

இன்ஷாஅல்லாஹ், மேற்படி நிரலுக்கு ஏற்ப அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியை வேண்டுவதுடன் தொழுகைக்காக வருகைத்தரும் அனைத்து மக்களின் முழுமையான ஒத்துழைப்பை அவாவி நிற்கின்றோம்.

புத்தளம் பெரியபள்ளி,
ஜம்இய்யதுல் உலமா புத்தளம் மாவட்டக் கிளை,
ஏற்பாட்டுக் குழுவினர்

File photo: 2013 Eid Festival prayer, Zahira N.C., Puttalam
Photo courtesy: Hasni Ahamed


Post a Comment

0 Comments