உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஒவ்வொரு அணியுடம் நேற்றுடன் 2 ‘லீக்’
ஆட்டங்களில் விளையாடி விட்டன. இன்று முதல் கடைசி ‘லீக்’ ஆட்டங்களில்
ஒவ்வொரு அணியும் ஆடுகிறது.
‘பி’ பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் நெதர்லாந்து– சிலி, ஸ்பெயின்– ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
நெதர்லாந்து
அணி தொடக்க ஆட்டத்தில் 5–1 என்ற கணக்கில் ஸ்பெயினையும், 2–வது ஆட்டத்தில்
3–2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி 2–வது சுற்றுக்கு நுழைந்தது.
சிலி
அணி முதல் ஆட்டத்தில் 3–1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவையும், இரண்டாவது
ஆட்டத்தில் 2–0 என்ற கணக்கில் ஸ்பெயினையும் வீழ்த்தி 2–வது சுற்றுக்கு
தகுதி பெற்றது. இரு அணிகளும் ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் உள்ளன.
ஸ்பெயின்– ஆஸ்திரேலியா ஆட்டம் சம்பிரதாயமானது. ஆறுதல் வெற்றி பெற இரு அணிகளும் போராடும்.
இதேபோல
‘ஏ’ பிரிவில் இன்று நள்ளிரவு நடைபெறும் ஆட்டங்களில் பிரேசில்– கேமரூன்,
மெக்சிகோ– குரோஷியா மோதுகின்றன. 4 புள்ளியுடன் இருக்கும் பிரேசில் ‘டிரா’
செய்தாலே 2–வது சுற்றுக்கு நுழைந்துவிடும். கேமரூன் ஏற்கனவே வாய்ப்பை
இழந்துவிட்டது.
இதேபோல மெக்சிகோ ‘டிரா’ செய்தாலே முன்னேறிவிடும். 3 புள்ளியுடன் இருக்கும் குரோஷியா வெற்றி பெற்றால் மட்டுமே நுழைய இயலும்.


0 Comments