தர்கா நகரில் இனவாத கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து 10 இலட்சம் நிதியுதவி
வழங்குவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை
உறுப்பினருமான தயா கமகே தெரிவித்தார்.இதற்கு மேலதிகமாக தனது முஸ்லிம் வர்த்த நண்பர்களுடன் கலந்துரையாடி இந்த
பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவிகளை பெற்றுத் தருவதாகவும்
அவர் உறுதியளித்தார்.
குறித்த நிதி நிதியமொன்றின் ஊடாக வழங்கப்படும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை தர்கா நகருக்கு விஜயம் செய்தனர்.
இதன்போது வெல்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே மாகாண சபை உறுப்பினர் தயா கமகே இந்த உறுதிமொழியை வழங்கினார்.

0 Comments